2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

பொத்துவில் வைத்தியசாலைக்கு உதவி

Suganthini Ratnam   / 2015 செப்டெம்பர் 28 , மு.ப. 08:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பைஷல் இஸ்மாயில்

பிரதி சுகாதார அமைச்சர் பைஷால் காசீமின்  வேண்டுகோளுக்கமைய சுகாதார அமைச்சின் பணிப்பாளர்  நாயகம் டாக்டர் பி.ஜி.மஹிபால உள்ளிட்ட குழுவினர் பொத்துவில் ஆதார வைத்தியசாலைக்கு ஞாயிற்றுக்கிழமை (27) வருகை தந்த நிலையில்இ அவ்வைத்தியசாலையிலுள்ள குறைபாடுகள் தொடர்பில் கேட்டறிந்துகொண்டனர்.

இந்த வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு உபகரணங்கள் தேவைப்படுவதுடன்இ வைத்தியர்கள் மற்றும் தாதியர்களுக்கான தங்குமிட தேவைப்பாடு உள்ளிட்டவை தொடர்பில் பிரதி அமைச்சர் பைஷால் காசீமின் கவனத்துக்கு வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் எம்.இஸ்ஸதீன் கொண்டுவந்தார்.

இந்தத் தேவைகளுக்கு 05 மில்லியன் ரூபாவை ஒதுக்கீடு செய்து தருவதாகவும் எதிர்வரும் வருடத்தில்; வைத்தியசாலைக்கு தேவையான வைத்தியர்களையும் தாதியர்களையும் வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும்  சுகாதார அமைச்சின்  பணிப்பாளர் நாயகம் டாக்டர் பி.ஜி.மஹிபால உறுதியளித்தார். அத்துடன், பற்சிகிச்சைப் பிரிவுக்கான நாற்காலியும் வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் கூறினார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .