Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Suganthini Ratnam / 2016 ஓகஸ்ட் 04 , மு.ப. 05:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
-அஸ்லம் எஸ்.மௌலானா,பி.எம்.எம்.ஏ.காதர்
கல்முனை மாநகரசபையின் புதிய அபிவிருத்தித்திட்டங்களை உடனடியாக ஆரம்பிக்கும் பொருட்டு ஒப்பந்தக்காரர்களிடமிருந்து கேள்விப்பத்திரங்கள் கோரப்படவுள்ளதாக அம்மாநகர ஆணையாளர் ஜே.லியாகத் அலி, இன்று வியாழக்கிழமை தெரிவித்தார்.
கல்முனை மாநகரசபையின் முதல்வராக எம்.நிஸாம் காரியப்பர் பதவி வகித்தபோது, கடந்த ஏப்ரல் மாதம் அவரால் முன்மொழியப்பட்ட 08 அபிவிருத்தித் திட்டங்களுக்காக நகர அபிவிருத்தி மற்றும் நீர்வழங்கல் அமைச்சின் இந்த வருடத்துக்கான வரவு- செலவுத்திட்ட நிதியிலிருந்து அமைச்சர் ரவூப் ஹக்கீமினால் 16 கோடியே 80 இலட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு, கடந்த மாத நடுப்பகுதியில் திறைசேரி அங்கிகாரமும் கிடைத்தது.
இதனை அடுத்து நகர அபிவிருத்தி மற்றும் நீர்வழங்கல் அமைச்சு, கிழக்கு மாகாணசபையின் உள்ளூராட்சி ஆணையாளருக்குப் பரிந்துரை செய்து, குறித்த வேலைத்திட்டங்களை உடனடியாக ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கோரியதற்கமைய கேள்விப்பத்திரங்கள் கோரப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.
கல்முனை ஏ.ஆர்.மன்சூர் பொதுநூலக புனரமைப்புக்காக 3 கோடியே 25 இலட்சம் ரூபாயும் கல்முனை பொதுச்சந்தை புனரமைப்புக்காக 2 கோடியே 60 இலட்சம் ரூபாயும் கல்முனை சந்தாங்;கேணி ஐக்கிய விளையாட்டு மைதானத்தின் பார்வையாளர் அரங்கு நிர்மாணப்பணியை பூர்த்திசெய்வதற்காக ஒரு கோடியே 70 இலட்சம் ரூபாயும் மருதமுனை பொது நூலகத்தில் மாநாட்டு மண்டபம் அமைப்பதற்காக 6 கோடியே 90 இலட்சம் ரூபாயும் நற்பிட்டிமுனை அஷ்ரப் ஞாபகார்த்த விளையாட்டு மைதான அபிவிருத்திக்கு ஒரு கோடி ரூபாயும் சேனைக்குடியிருப்பு, பெரியநீலாவணை மற்றும் இஸ்லாமாபாத் பிரதேசங்களில் சமூக வைத்திய நிலையங்கள் அமைப்பதற்கு தலா 45 இலட்சம் ரூபாய் படியும்; ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
45 minute ago
3 hours ago