Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Suganthini Ratnam / 2016 ஜூலை 15 , மு.ப. 04:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.ஹனீபா
தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கலை, கலாசாரப்பீடத்தின் பீடாதிபதியாக அப்பல்கலைக்ழகத்தில் புவியியல்துறைத் தலைவராகக் கடமையாற்றிய எம்.எல்.பௌசுல் அமீர் நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த 12ஆம் திகதி நடைபெற்ற பீடாதிபதியை தெரிவுசெய்வதற்கான தேர்தலில் போட்டியிட்ட இவர் 12 வாக்குகளைப் பெற்று கலை, கலாசாரப்பீடத்தின் 06ஆவது பீடாதிபதியாக இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவருடன் இத்தேர்தலில் போட்டியிட்ட அரசியல் விஞ்ஞானத்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் 10 வாக்குகளையும் பீடாதிபதியாக கடமையாற்றிய எம்.ஏ.அப்துல் ஜப்பார் 08 வாக்குகளையும் பெற்றுள்ளனர்
பீடாதிபதி எம்.எல்.பௌசுல் அமீர் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் புவியியல் பாட இளமானியும் முதுதத்துவமானியும் ஆவார். மேலும் இவர் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் ஆரம்பகால விரிவுரையாளர்களில் ஒருவரும் ஆவார்.
இதேவேளை, புதிய பீடாதிபதியாக எம்.எல்.பௌசுல் அமீர் தெரிவு செய்யப்பட்டதையடுத்து அவரின் வெற்றிடத்துக்கு சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி. எம்.ஐ.எம்.கலீல் நியமிக்கப்பட்டுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
47 minute ago
50 minute ago
52 minute ago