2025 மே 19, திங்கட்கிழமை

புனித பீட திறப்பு விழா

Sudharshini   / 2016 ஜூலை 28 , பி.ப. 12:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

வி.சுகிர்தகுமார்  

அம்பாறை, அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஷ்ண மகா வித்தியாலயத்தில் பழைய மாணவர் ஒருவரால், 20இலட்சம் ரூபாய் செலவில்  நிர்மாணிக்கப்பட்டுள்ள இராமகிருஷ்ணர் புனித பீட திறப்பு விழா இன்று(28) நடைபெற்றது.

பாடசாலையின் அதிபர் ஜே.ஆர்.டேவிட் அமிர்தலிங்கம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், மட்டக்களப்பு இராமகிருஷ்ணமிஷன் தலைவர் சுவாமி பிரபு பிரேமானந்தா ஜீ மகராஜ் அருளாளராக கலந்துகொண்டு புனித பீட படிகத்தினை திரை நீக்கம் செய்து வைத்தார்.

பாடசாலை சமூகத்தின் வேண்டுகோளுக்கமைய பாடசாலையின் பழைய மாணவரும் அமெரிக்கா, கலிபோனியா பல்கலைக்கழக விரிவுரையாளருமான எஸ். புவனேந்திரன் இதற்கான நிதியுதவியினை வழங்கி இருந்தார்.

இதேவேளை, பாடாசாலையின் ஒன்று கூடல் மண்டபத்தில் நடைபெற்ற பாராட்டு விழாவிலும் கலந்துகொண்டார்;.

இப்புனித பீட திறப்பு விழாவில் திருக்கோவில் வலய கல்விப் பணிப்பாளர்; ஆர்.சுகிர்தராஜன், ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.ஜெகதீசன், பிரதிக் கல்விப் பணிப்பாளர் வி.குணாளன், கோட்டக் கல்விப் பணிப்பாளர் எஸ்.இராசமாணிக்கம் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X