2025 ஒக்டோபர் 02, வியாழக்கிழமை

பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு

Gavitha   / 2015 செப்டெம்பர் 10 , மு.ப. 03:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஐ.ஏ.ஸிறாஜ்

அக்கரைப்பற்று வலயக்கல்வி அலுவலக கலாசார நலன்புரி பிரிவின் ஏற்பாட்டில்,  கல்விப்புலத்தில் கடமையாற்றி ஓய்வுபெற்றவர்கள் மற்றும் இடமாற்றம் பெற்றுச் சென்ற அதிகாரிகளை பாராட்டிக் கௌரவிக்கும் வைபவம் நேற்று புதன்கிழமை (09) மாலை அட்டாளைச்சேனை ஆலம்குளம் மசூர் கபானா மண்டபத்தில் நடைபெற்றது.

இதன்போது, அக்கரைப்பற்று வலயக்கல்வி அலுவலகத்தில் நீண்டகாலம் பிரதிக்கல்விப் பணிப்பாளராக பணியாற்றி இடமாற்றம் பெற்றுச்சென்ற ஏ.எஸ்.அகமட் கியாஸ் மற்றும் ஓய்வு பெற்றுச்சென்ற அதிகாரிகளான பொத்துவில் உப வலயக்கல்விப் பணிப்பாளர் ஏ.அப்துல் அஸீஸ், உதவிகல்விப் பணிப்பாளர் கே.எல்.அப்தல் மஜீத், அக்கரைப்பற்று கோட்டக்கல்விப் பணிப்பாளர் எம்.ஐ.அப்துல் கபூர், சமாதான இணைப்பாளர் ஏ.ஜீ.எம்.தாவூத் ஆகியோர் கல்வி அதிகாரிகளினால் பாராட்டி நினைவுச்சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

கலாசார நலன்புரி பிரிவின் தலைவரும் உதவிக்கல்விப் பணிப்பாளருமான மௌலவி யூ.எம்.நியாஸி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பிரதம அதிதியாக அக்கரைப்பற்று வலயக் கல்விப்பணிப்பாளர் சட்டத்தரணி ஏ.எல்.எம்.காசீம்,  பிரதிக்கல்விப் பணிப்பாளர் ஏ.எம்.அஹமட்லெவ்வை கௌரவ அதிதியாகவும் கலந்து கொண்டார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X