Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Administrator / 2015 ஓகஸ்ட் 26 , மு.ப. 06:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
-பி.எம்.எம்.ஏ.காதர்
பெரியநீலாவணை மயானத்தை சுத்திகரிக்கமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேற்படி மயானத்தில் சுற்று மதில் அமைக்கப்படாதுள்ளதால் அப்பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகள் மயானத்தில் கொட்டப்படுகின்றன.இதனால் சுகாதார சீர்கேடு உள்ளிட்ட பல பிரச்சினைகளக்க முகங்கொடுத்து வருவதாக பிரதேசவாசிகள் விசனம் தெரிவித்துள்னர்.
இது குறித்து கல்முனை மாநகர சபையின் ஆணையாளர் ஜே.லியாகத் அலி கூறுகையில்,
கல்முனை மாநகர சபையின் கீழ் கல்முனையில் உள்ள ஒரு மயானமே எமது பராமரிப்பில் உள்ளது. ஏனைய மயானங்கள் சட்டப்படி வர்த்தமானி அறிவித்தல் மூலம் எங்கள் மாநகர சபையின் கீழ் கொண்டுவரப்படவில்லை.
இதனால் பெரியநீலாவணை மயானத்தை பராமரிக்கும் பொறுப்பு எங்களிடம் இல்லை.
இருந்த போதிலும் பெரியநீலாவணை மயானத்தை துப்புரவு செய்ய பொது அமைப்புக்கள்,தொண்டு நிறுவனங்கள் முன்வந்தால் எமது ஆளனிகளையும் வாகனங்களையும் வழங்கி துப்புரவுப் பணிக்கு உதவ எமது மாநகர சபை ஆயத்தமாக உள்ளது என்றார்.
2 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
3 hours ago