2025 செப்டெம்பர் 29, திங்கட்கிழமை

பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டில் கைதானவருக்கு பிணை

Suganthini Ratnam   / 2016 ஜூலை 26 , மு.ப. 03:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.ஹனீபா

அம்பாறை, நாவிதன்வெளிப் பிரதேசத்தில் இரு மாணவர்களுக்கு சாராயம் கொடுத்து பாலியல் துஷ்பிரயோகத்துக்கு முயற்சித்த குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில்  வைக்கப்பட்ட 40 வயதுடைய ஒருவரை 7,500 ரூபாய் ரொக்கப்பிணையிலும் இரண்டு இலட்சம் ரூபாய் பெறுமதியான சரீரப்பிணையிலும் கல்முனை நீதவான் நீதிமன்ற நீதவான் ஐ.பயாஸ் றஸாக், நேற்று  திங்கட்கிழமை  விடுவித்துள்ளார்.

நாவிதன்வெளிப் பிரதேச பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் 14, 15 வயதுடைய இரு மாணவர்களுக்கு கடந்த ஜுன் மாதம் 26ஆம் சாராயம் கொடுத்து, மக்கள் நடமாட்டம் இல்லாத இடத்தில் வைத்து பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்த முற்பட்டதாக தெரியவந்தது.

இது தொடர்பாக இச்சிறுவர்களின் தாய் ஒருவரால் பொலிஸில் செய்யப்பட்ட முறைப்பாட்டையடுத்து, குறித்த நபரை பொலிஸார்; கைதுசெய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X