2025 ஜூலை 02, புதன்கிழமை

பொலிஸ் நடமாடும் சேவை

Niroshini   / 2015 ஒக்டோபர் 25 , மு.ப. 05:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பைஷல் இஸ்மாயில்

அம்பாறை, சம்மாந்துறை மஜீத் புறத்தில் வாழும் மக்களின் நன்மை கருதி சம்மாந்துறை பொலிஸ் நிலையத்ததால் ஏற்பாடு செய்யப்பட்ட விசேட பொலிஸ் நடமாடும் சேவை நேற்று சனிக்கிழமை இடம்பெற்றது.

சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எச்.எம்.உபுல் பிரியலால் தலைமையில் இடம்பெற்ற இந்த நடமாடும் சேவையில் தேசிய அடையாள அட்டை, கடவுச்சீட்டு உள்ளிட்ட பல முக்கிய பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட்டதோடு இந்நடமாடும் சேவையில் கலந்து கொண்டவர்களுக்கு இலவச கண்பரிசோதனை செய்து மூக்குக் கண்ணாடியும் தென்னக் கன்றுகளும் சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எச்.எம்.உபுல் பிரியலாலினால் வழங்கி வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில்,பொலிஸ் பரிசோதகரும் சம்மாந்துறை பொலிஸ் நிலைய சமூக சேவை பொலிஸ் பொறுப்பதிகாரியுமான எஸ்.எம். அமீர், நிந்தவூர் ஜும்மா பள்ளிவாசல் செயலாளர் எம்.ஏ.எம். றசீன், மஜீத் புற பாடசாலையின் அதிபர் எம்.முசம்மில், கப்சோ நிறுவனப் பணிப்பாளர் காமில் இம்தாத் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .