Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2015 ஒக்டோபர் 12 , மு.ப. 05:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
-அஸ்லம் மௌலானா
இஸ்லாமியச் சிறுவர்களைப் பராமரிக்கக்கூடிய சிறுவர் அபிவிருத்தி நிலையமொன்று பாலமுனைப் பிரதேசத்தில் அமைக்கப்படுமென அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எம்.ஐ.எம்.அமீர் தெரிவித்தார்;.
அம்பாறை மாவட்டத்தில் அதிகரித்துவருகின்ற சிறுவர் துஷ்பிரயோகங்களைக் கட்டுப்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல், மாவட்ட சிறுவர் நன்நடத்தை உத்தியோகஸ்தர் காரியாலய கேட்போர் கூடத்தில் ஞாயிற்றுக்கிழமை (11) மாலை நடைபெற்றது.
இதன்போது, துஷ்பிரயோகத்துக்குள்ளாகும் சிறுவர்களை அவரவர் மார்க்க வழிமுறைகளில் பராமரிப்பதற்கான சிறுவர் இல்லங்கள் உள்ளன. ஆனால், இஸ்லாமியச் சிறுவர்களைப் பராமரிக்கக்கூடிய சிறுவர் இல்லம் ஒன்றேனும் அம்பாறைப் பிராந்தியத்தில் இல்லாமலிருப்பது பெரும் குறையாகுமென்று அம்பாறை மாவட்ட சிரேஷ்ட சிறுவர் நன்நடத்தை உத்தியோகத்தர் எம்.ஏ.வசீர்டீன்; தெரிவித்தார்.
இதற்குப் பதிலளிக்கையிலேயே மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் இதனைக் கூறினார். இந்த விடயம் தொடர்பில் கவனத்திற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
சிறுவர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் கொடுமைகள், அதன் தன்மைகள், அதற்கான காரணிகள், அவற்றிலிருந்து சிறுவர்களைப் பாதுகாப்பதற்கான புதிய பொறிமுறைகள், அவற்றை நடைமுறைப்படுத்தும் உபாயங்கள் தொடர்பில் இதன்போது விரிவாக ஆராயப்பட்டன.
அம்பாறை மாவட்ட சிரேஷ்ட சிறுவர் நன்நடத்தை உத்தியோகஸ்தர் எம்.ஏ.ஏ.வசீர்டீன் தலைமையில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில் அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எம்.ஐ.எம்.அமீர், அக்கரைப்பற்று பொலிஸ் நிலையப் பதில் பொறுப்பதிகாரி எம்.எச்.எம்.ஹசீம், அம்பாறை மாவட்ட சிறுவர் பாதுகாப்பு இணைப்பாளர் யூ.எல்.அசார்டீன், முன்பள்ளி உதவிக் கல்விப் பணிப்பாளர்களான ஏ.எம்.லாபீர், சீ.எஸ்.அழககோன், அம்பாறை சிறுவர் நன்நடத்தை அலகுப் பொறுப்பதிகாரி ஏ.எம்.லலித் ரத்னபால உள்ளிட்ட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
20 minute ago
2 hours ago
2 hours ago
01 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
2 hours ago
2 hours ago
01 Oct 2025