2025 மே 12, திங்கட்கிழமை

‘பகிரங்க விவாதம் கட்சித் தலைமைக்கு தேவையற்றது’

Editorial   / 2019 ஒக்டோபர் 17 , பி.ப. 05:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.ஏ.றமீஸ், நூருல் ஹுதா உமர்

“ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்‌ஷ, தனது வெற்றிக்குச் சவாலாக உள்ள முஸ்லிம் சமூகத்தின் வாக்குகளை, ஜனாதிபதி வேட்பாளர், அமைச்சர் சஜித் பிரேமதாஸவுக்குச் செல்வதைத் தடுக்கும் மாற்று வழியாகவே, முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லாவை ஒப்பந்தத்தின் அடிப்படையில் களமிறக்கியுள்ளார்” என, அம்பாறை மாவாட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம்.மன்சூர் தெரிவித்தார்.

நாடாளுமன்ற உறுப்பினரால் ஏற்பாடு செய்யப்பட்ட ஊடக சந்திப்பு, சம்மாந்துறையில் அமைந்துள்ள அவரது மக்கள் பணிமனையில், நேற்று (16) மாலை  நடைபெற்றது.

இதன்போதே அவர் மேற்படிக் கருத்தைத் தெரிவித்தார்.

தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில், “ஜனாதிபதி வேட்பாளராக ஹிஸ்புல்லா களமிறங்கியிருப்பதான நிலைப்பாடு என்பது முஸ்லிம் சமூகத்துக்கு பாரதூரமான நிலைமையைத் தோற்றுவிக்கக்கூடும்” என்றார்.

மேலும், “இவ்விடயத்தை விவாதிப்பதற்கு சாதாரண பொதுமகன் ஒருவரே போதும் என்ற வகையில், அவரது காலத்திலிருந்து அரசியலில் களம் இறங்கியவன் என்ற வகையில், அவரோடு பகிரங்க விவாதத்துக்குத் தயாராக உள்ளேன். அவரோடு விவாதத்துக்குச் செல்ல எமது கட்சித் தலைமைக்கு எவ்வித தேவைப்பாடும் கிடையாது” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X