Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
வி.சுகிர்தகுமார் / 2020 ஜனவரி 28 , பி.ப. 03:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
“பசுமையான கிழக்கு“ மாகாண மரநடுகை நிகழ்ச்சித்திட்டத்தின் கீழான மர நடுகை வேலைத்திட்டம், ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திலும் இன்று (28) ஆரம்பித்து வைக்கப்பட்டது.
ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தின் கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் பி.கோபிகாந் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தர் ஏ.சோபிதா, மேலதிக மாவட்டப் பதிவாளர் எம்.பிரதீப், பிரதம முகாமைத்துவ உதவியாளர் ஆ.சசீந்திரன், பிரிவுக்குப் பொறுப்பான பிரதம முகாமைத்துவ உதவியாளர் ஜிப்ரி, அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ்.எம்.றியால்டீன் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டு, பிரதேச செயலக வளாகத்தில், மரக்கன்றுகளை நாட்டி வைத்தனர்.
கிழக்கு மாகாண கிராம அபிவிருத்தித் திணைக்களத்தால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள இத்திட்டத்தின் அரச அலுவலுகங்கள் மாத்திரமன்றி, கிராமங்கள் ரீதியாகவும் கிராம அபிவிருத்தி சங்கங்கள், மகளிர் அபிவிருத்தி சங்கங்களின் ஏற்பாட்டில், மரக்கன்றுகள் விநியோகம் நடைபெற்றதுடன், மரக்கன்றுகள் நாட்டியும் வைக்கப்பட்டன.
இதற்கமைவாக, அக்கரைப்பற்று 7/4 ஆம் பிரிவில் மகளிர் அபிவிருத்தி சங்க தலைவி எஸ்.உதயமலர் தலைமையிலும் இவ்வேலைத்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இதன்போது, கிராம உத்தியோகத்தர் ச.நிரோஜனி, பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் அ.யோகநாயகி, சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் சமந்த திசாநாயக்க உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
38 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
38 minute ago
2 hours ago