2025 மே 05, திங்கட்கிழமை

படைப்புழுவைக் கட்டுப்படுத்த செயற்குழு அமைப்பு

எஸ்.கார்த்திகேசு   / 2019 ஜனவரி 29 , பி.ப. 01:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

அம்பாறை, பொத்துவில் பிரதேசத்தில் படைப்புழுத் தாக்கம் தொடர்பான விழிப்புணர்வு மேற்கொள்ளவும் அவற்றை அழித்தொழிக்கும் நடவடிக்கைகளை முன்னெடுக்கவும், பொத்துவில் பிரதேச செயலாளர் பிரிவுக்கான செயற்பாட்டுக் குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது.

படைப்புழுத் தாக்கம் தொடர்பாக, பிரதேச செயலகத்தில் பணிபுரியும் வெளிக்கள உத்தியோகத்தர்களைத் தெளிவூட்டல், செயற்குழு அமைத்தல் தொடர்பான ஒன்றுகூடல், பிரதேச செயலாளர் எம்.ஏ.சீ.அஹமட் நஸீல் தலைமையில், நேற்று (28)  பிற்பகல் இடம்பெற்றதன.

இதில் பொத்துவில் பிரதேச கமநல சேவையின் விவசாய போதனாசிரியர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டு, பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கான தெளிவூட்டல்களை முன்வைத்தனர்.

பொத்துவில் பிரதேசத்தில் சுமார் 79 ஏக்கர் சோளம் பயிரிடப்பட்டிருந்ததாகவும் அவற்றில் சுமார் 74 ஏக்கர் சோளப் பயிர்ச் செய்கை பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதிகாரிகள் தெரிவித்தனர்.

இப்பாதிப்புத் தொடர்பாக, 50 சோளப் பயிர்ச் செய்கையாளர்களிடம் இருந்து பொத்துவில் கமநலச் சேவை திணைக்களத்துக்கு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அது தொடர்பான மேலதிக நடவடிக்கைகளை திணைக்களம் முன்னெடுத்து வருவதாகவும், அதிகாரிகள் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X