Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 02, வெள்ளிக்கிழமை
எம்.எஸ்.எம். ஹனீபா / 2018 ஏப்ரல் 16 , பி.ப. 03:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
அம்பாறை மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளிடமிருந்து 02 வருட பயிற்சிக் காலத்துக்கு சேர்த்துக் கொள்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கே. விமலநாதன், இன்று (16) தெரிவித்தார்.
தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அமைச்சின் செயலாளரால் கடந்த 2017.08.06ஆம் திகதி பத்திரிகை விளம்பரத்துக்கமைய விண்ணப்பம் செய்து நேர்முகப் பரீட்சைக்கு அழைக்கப்படாத அல்லது விண்ணப்பிக்காத வேலையற்ற பட்டதாரிகள் விண்ணப்பிக்க முடியுமெனவும் அவர் தெரிவித்தார்.
31.12.2016 அல்லது அதற்கு முன்னராக அங்கிகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் ஒன்றில் பட்டத்தைப் பெற்றவர்களாகவும் 08.09.2017 அன்று 21 வயதுக்குக் குறையாமலும், 35 வயதுக்கு மேற்படாமலும் இருத்தல் அவசியம்.
விண்ணப்பிக்கத் தவறியவர்கள், விண்ணப்பப்படிவத்தைப் பூர்த்தி செய்து மாவட்ட செயலகத்தில் எதிர்வரும் 20ஆம் திகதிக்கு முன்னர் ஒப்படைக்குமாறும், அவர் கேட்டுள்ளார்.
இவர்களுக்கான நேர்முகப் பரீட்சைக்கான திகதி பின்னர் அறிவிக்கப்படுமெனவும், நேர்முகப்பரீட்சையில் கலந்துகொள்ளும் பட்டதாரிகளிடம் மொழித் தேர்ச்சி, கணினி அறிவு, மேலதிக கல்வித் தகமை, விடயத்துக்குப் புறம்பான செயற்பாடுகள், நேர்முகப் பரீட்சையின் போது காட்டப்படும் திறமைகளும் செயற்பாடுகளும் பரீட்சிக்கப்படுமெனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
7 hours ago
01 May 2025
01 May 2025