2025 மே 13, செவ்வாய்க்கிழமை

பட்டமளிப்பு விழா

அஸ்லம் எஸ்.மௌலானா   / 2020 ஜனவரி 30 , பி.ப. 01:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

சாய்ந்தமருது தௌவா இஸ்லாமிய கலா பீடத்தின் 10ஆவது பட்டமளிப்பு விழா, ஞாயிற்றுக்கிழமை (02) காலை 8.30 மணி தொடக்கம் சாய்ந்தமருது அல்ஹிலால் வித்தியாலய மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

கலாபீடத் தலைவர் யூ.எல்.எம்.காஸிம் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில், கிழக்கு மாகாண சிவில் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி அல்-ஹாபிழ் என்.எம்.அப்துல்லாஹ் பிரதம அதிதியாக கலந்துகொள்ளவுள்ளார்.

அத்துடன், கிழக்கிலங்கை அரபுக் கல்லூரி அதிபர் ஏ.எல்.எம்.அஷ்ரப் முதன்மை சொற்பொழிவாளராகவும் மேர்ஸி கல்வி வளாகப் பணிப்பாளர் ஏ.பௌசுர் ரஹ்மான், மேர்ஸி லங்கா நிறுவனத்தின் நிகழ்ச்சித் திட்டப் பணிப்பாளர் எம்.ஆர்.எம்.முனாஸ் ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும் கலந்துகொள்ளவிருக்கின்றனர்.

இதன்போது, இக்கலாபீடத்தில் அல்-குர்ஆனை முழுமையாக மனனம் செய்யும் பாடத்திட்டத்தை சிறப்பாக பூர்த்தி செய்த பல மாணவர்களுக்கு அல்-ஹாபிழ் பட்டமும் வழங்கப்படவுள்ளது.

அதேவேளை, அன்றைய தினம் பிற்பகல் 04 மணியளவில், சாய்ந்தமருது தௌவா இஸ்லாமிய கலா பீடத்தின் வருடாந்த பொதுக் கூட்டமும் நிர்வாகத் தெரிவும் நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X