2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

’பதவி உயர்வு வழங்க நடவடிக்கை எடுக்கவும்’

Princiya Dixci   / 2021 பெப்ரவரி 22 , மு.ப. 11:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.ஹனீபா

அரச முகாமைத்துவ உதவியாளர்களாக கடமையாற்றும் பட்டதாரிகளுக்கு பதவி உயர்வு, வேதன ஏற்றம் ஆகியன வழங்க உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென, ஸ்ரீலங்கா அரச சேவை மற்றும் மாகாண அரச சேவை தொழிற்சங்க சம்மேளனத்தின் தலைவர் எஸ். லோகநாதன், இன்று (22) தெரிவித்தார்.

இது தொடர்பாக  உள்நாட்டு அலுவல்கள், பொது நிர்வாக, உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன், கடற்றொழில் மற்றும் நீரியல் வள மூலங்கள் அமைச்சர் கே. என். டக்ளஸ் தேவானந்தா, அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் டபிள்யூ. டி. வீரசிங்க ஆகியோருக்கு  அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

“அரசாங்க நிர்வாக சுற்றறிக்கைகளின் பிரகாரம் 1994. 08. 06ஆம் திகதிக்கு முன்னர் நியமனம் கிடைத்தவர்களில் 15 வருடங்களை பூர்த்தி செய்த அரச முகாமைத்துவ உதவியாளர் வகுப்பு -1 ஐ சேர்ந்தவர்களுக்கு சரியான வகையில் சம்பள படிநிலை வழங்கப்படுகின்றது. 

“ஆனால், 2016. 03. .28ஆம் திகதி சுற்றுநிரூபம் வெளியிடப்பட்டபோது அரச முகாமைத்துவ உதவியாளர் சேவை - 1 ஐ பூர்த்தி செய்யாதவர்களுக்கு அநீதிகள் இழைக்கப்பட்டுள்ளன.

“சப்பிரகமூவா மாகாண உத்தியோகத்தர்களால் உயர் நீதிமன்றத்தில் 2003. 01. 18ஆம் திகதி உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. 2007. 05. 14 அன்று உயர் நீதிமன்ற தீர்ப்பு மூலம் இவர்களுக்கு நீதி கிடைத்தது.

“ஆனால்? வடக்கு, கிழக்கு மாகாணங்களை சேர்ந்த  பட்டதாரி உத்தியோகத்தர்கள் அப்போதைய  சூழ்நிலை காரணமாக உயர் நீதிமன்ற தீர்ப்பு குறித்து அறியாத காரணத்தால் விண்ணப்பிக்க முடியாமல் போனது. சம்பந்தப்பட்ட சுற்றறிக்கை வெளியிடப்பட்டபோது, பல்கலைக்கழக பட்டம் பெற்ற 2008ஆம் ஆண்டுக்கு பின்னரான பட்டதாரி உத்தியோகத்தர்களுக்கு  உரிய சம்பள ஏற்றம் வழங்கப்படல் வேண்டுமெ சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

“அத்துடன், அரச முகாமைத்துவ சேவையளர் வகுப்பு - 02 மற்றும் 03 ஐ சேர்ந்தவர்களுக்கும் உரிய சம்பள ஏற்றம் வழங்கப்பட வேண்டும். நாடளாவிய ரீதியில் இவ்வாறாக 50 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், இவர்களில் 03 ஆயிரம் பேர் வடக்கு, கிழக்கு மாகாணங்களை சேர்ந்தவர்கள்.

“தற்போது பல்கலைக்கழக பட்டம் பெற்று அரச முகாமைத்துவ உதவியாளர்களாக கடமையாற்றும் பட்டதாரிகளுக்கு எதிர்காலங்களில் காலங்களில் பட்டதாரிகளுக்கு உரிய  சேவைக்குள் பொதுநிர்வாக அமைச்சின் கீழ் உள்வாங்கப்பட வேண்டும். இதற்கான புதிய அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை வெளியிடப்படல் வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .