Princiya Dixci / 2022 ஏப்ரல் 06 , பி.ப. 04:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
அஸ்லம் எஸ்.மௌலானா
கல்முனை மாநகர சபையின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பான உறுப்பினர் அஹமட்லெப்பை றபீக், அப்பதவியில் இருந்து விலக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை, கல்முனை மாநகர சபைக்கான தெரிவத்தாட்சி அதிகாரி சுகன் ஸ்ரீநாத் அத்தநாயக வெளியிட்டுள்ளார்.
குறித்த உறுப்பினர், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் பதவி வகித்துக் கொண்டு, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்கு ஆதரவு வழங்கி வந்தார் என்ற குற்றச்சாட்டில் ஒழுக்காற்று நடவடிக்கைக்குட்படுத்தப்பட்டு, சுதந்திரக் கட்சி உறுப்புரிமையில் இருந்து நீக்கப்பட்டிருந்தார்.
இது குறித்து அக்கட்சியின் செயலாளர் தயாசிறி ஜயசேகரவினால் தேர்தல்கள் திணைக்களத்துக்கு அறிவிக்கப்பட்டிருந்தது.
இவர், கல்முனை மாநகர சபைத் தேர்தலில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பில் நற்பிட்டிமுனை வட்டாரத்தில் போட்டியிட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
4 hours ago
9 hours ago
22 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
9 hours ago
22 Dec 2025