2025 மே 12, திங்கட்கிழமை

பரீட்சாத்திகளின் நன்மை கருதி படகுச்சேவை

Editorial   / 2019 டிசெம்பர் 01 , பி.ப. 03:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம். ஹனீபா

 அம்பாறை மாவட்டம் வெள்ளத்தினால் பாதிக்கப்படும் பட்சத்தில் க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றும் பரீட்சாத்திகளின் நன்மை கருதி பரீட்சை சுமூகமாக இடம்பெறுவதற்குரிய ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் அம்பாறை மாவட்ட உதவிப் பணிப்பாளர் எம்.ஏ.சி.எம். றியாஸ்  இன்று ஞாயிற்றுக்கிழமை (01) தெரிவித்தார்.

 அம்பாறை மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையினால் வெள்ளம் ஏற்படும் பட்சத்தில்  க.பொ.த சாதாரண தரப் பரீட்சை நிலையங்களில் அனர்த்த பாதுகாப்பு குறைத்தல் தொடர்பாக முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், தெரிவித்தார்.

 இது தொடர்பாக மாவட்ட அரசாங்க அதிபரினால் சகல வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கும், பிரதேச செயலாளர்களுக்கும் முன்னேற்பாடுகளை மேற்கொ ள்ளுமாறும் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், கூறினார்.

கிட்டங்கிப் பாலத்தால்  போக்குவரத்து தடைப்படு மானால் க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றும் பரீட்சாத்திகள் மற்றும் பரீட்சை மேற்பார்வையாளர்களாக கடமையாற்றுபவர்களைக் கொண்டு செல்வதற்குரிய இரண்டு படகுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும், சுட்டிக்காட்டினார்.

இது தொடர்பாக சம்பந்தப்பட்டவர்கள் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் காரியாலயத்தில் அமைந்துள்ள அனர்த்த முகாமைத்துவ நிலையத்துடன் தொடர்பு கொள்ளுமாறு அவர் மேலும் கேட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X