2025 மே 12, திங்கட்கிழமை

‘பல்கலைக்கழகத்தின் செயற்பாடுகளால் கல்வி பாதிப்பு’

Editorial   / 2019 டிசெம்பர் 11 , பி.ப. 03:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆர். அனிதா

இலங்கை தென்கிழக்குப் பல்கலைகழகத்தின் செயற்பாடுகளால் வெளிவாரி மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுவதாகவும் இது தொடர்பில் பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவின் தலைவர் கவனமெடுக்குமாறும்,  வெளிவாரி மாணவர்கள் கோரியுள்ளனர்.

தென்கிழக்குப் பல்கலைகழகத்தின் வெளிவாரிப் பட்டபடிப்புக்கான (பொது கலைமாணி) 2015/2016 ஆம் ஆண்டுக்கான மாணவர்களை 04.10.2015 திகதியன்று பதிவுசெய்து, கற்றல் செயற்பாடுகள் நடைபெற்றன.

குறிப்பிட்ட பட்டப்படிப்பை, ஐந்து வருடங்களுக்குள் பூர்த்தி செய்யப்பட வேண்டுமென, பல்கலைக்கழக ஆணைக்குழு நிர்ணயித்திருந்தது. எனினும், அதன்படி, கல்வி நடவடிக்கைகள் நடைபெறவில்லையென, வெளிவாரி பட்டப்படிப்பு மாணவர்கள் தெரிவித்தனர்.

இந்தப் பட்டப்படிப்புக்காக, சுமார் 1,500 மாணவர்கள் பதிவு செய்திருந்தன நிலையில், குறிப்பிட்ட காலத்தில் விரிவுரைகள் இடம்பெறவில்லையென,  மாணவர்கள் தெரிவித்தனர்.

அத்துடன், காலதாமதமாகி பரீட்சைகள் நடைபெறுவதாகவும் குறிப்பிட்ட காலத்துக்குள் பரீட்சை அனுமதி அட்டைகள் கிடைக்கப்பெறுவதில்லை எனவும் சரியான நேரத்தில் மாணவர்களுக்குத் தகவல்களை பல்கலைக்கழகம் வழங்குவதில்லை எனவும், மாணவர்கள் கவலை தெரிவித்தனர்.

பல்கலைக்கழகத்தின் மேற்படிச் செயற்பாடுகளால் சில மாணவர்கள் கல்வியைத் தொடராமல் இடைநிறுத்தியுள்ளார்கள் எனவும், அவர்கள் கவலை தெரிவித்தனர்.

தற்பொழுது  பட்டப்படிப்பை பூர்த்தி செய்து, தொழிலொன்றை பெற்றுக்கொள்ள முடியவில்லை எனவும் தாங்கள் பட்டப்படிப்பை பூர்த்தி செய்து தொழிலைப் பெற்றுக்கொள்ள வயது எல்லை 45 ஐ தாண்டிவிடும் எனவும் மாணவர்கள் கருத்துத் தெரிவித்தனர்.              

எனவே, இது தொடர்பில், பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவின் தலைவர் கவனமெடுக்குமாறு, தென்கிழக்கு பல்கலைக்கழக வெளிவாரி மாணவர்கள் கோரியுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X