வி.சுகிர்தகுமார் / 2019 செப்டெம்பர் 17 , பி.ப. 04:24 - 0 - {{hitsCtrl.values.hits}}

அம்பாரை - ஆலையடிவேம்பு ஸ்ரீ முருகன் ஆலயத்தில், நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரனின் நிதியொதுக்கீட்டில் நிர்மாணிக்கப்பட்ட பல்தேவைக் கட்டடம், நேற்று (16) இரவு திறந்துவைக்கப்பட்டது.
ஆலயத் தலைவர் ஆர்.ஜெகநாதன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், கவீந்திரன் கோடீஸ்வரன் எம்.பி, ஆலய நிர்வாகத்தால் பொன்னாடை போர்த்திக் கௌரவிக்கப்பட்டார்.
ஆலயத்தின் வருடாந்த பிரமோற்சவ பெருவிழாவின் பூங்காவனத் திருவிழாவை சிறப்பிக்கும் முகமாகவே இக்கட்டடம் திறந்துவைக்கப்பட்டதுடன், சமூகத்திற்காகா பாடுபட்டுழைத்த ஓய்வுபெற்ற ஆசிரியை திருமதி செல்வநேசம் சபாரெத்தினம், சமூக சேவையாளர் சிவசம்பு உள்ளிட்டர்களும் கல்வியில் சாதனை படைத்த மாணவர்களும் பாராட்டிக் கௌரவிக்கப்பட்டனர்.
1 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago
4 hours ago