2025 மே 03, சனிக்கிழமை

பள்ளிவாசல் மையவாடி விரைவில் புனரமைப்பு

Editorial   / 2022 மார்ச் 10 , மு.ப. 11:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

அஸ்ஹர் இப்றாஹிம்

கல்முனை கடற்கரைப் பள்ளிவாசல் மையவாடியில் மண் நிரப்பி புனரமைப்பு செய்வது தொடர்பாக திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்  எச்.எம்.எம்.ஹரீஸ், நேற்று (09) திடீர் கள விஜயம் மேற்கொண்டார்.

இதன்போது, கல்முனை பிரதேச செயலாளர் ஜே.லியாக்கத் அலி, உதவித் திட்டமிடல் பணிப்பாளர் எம்.ஜெளபர், கல்முனை முஹைத்தீன் ஜும்மாப் பள்ளிவாசல் தலைவர் டொக்டர் எஸ்.எம்.ஏ அஸீஸ், பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸின் பிரத்தியேக செயலாளர் நௌபர் ஏ பாபா ஆகியோர் கலந்துகொண்டனர்.

அத்துடன், கல்முனை உலமா சபைத் தலைவர் பீ.எம்.ஏ ஜலீல் (பாகவி), ஸ்ரீ.ல.மு.கா.12ஆம் வட்டார அமைப்பாளர் எம்.எஸ் பழீல், கடற்கரைப் பள்ளி மையவாடி புனரமைப்பு  நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் சீ ஸ்டார் விளையாட்டு கழகத்தினரும் இதில்  கலந்துகொண்டனர்.

இக்கள விஜயத்தின்  பின்னர் இது தொடர்பாக கல்முனை மாநகர சபையில் உயர் மட்டக் கலந்துரையாடல் ஒன்றும் நடைபெற்றது.

இக் கலந்துரையாடலில் குறுகிய காலத்துக்குள் இந்த மையவாடியை புனரமைப்பு செய்து முடிப்பதற்கு திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்  எச்.எம்.எம்.ஹரீஸ் தனது நிதி ஒதுக்கீட்டில் இருந்து நிதியொடுக்கீடு செய்தார்.

மேலும், கல்முனை நாகூர் ஆண்டகை தர்கா ஷரீப் கடற்கரைப் பள்ளிவாசல் மற்றும் கல்முனை முஹைதீன்  ஜும்மா பெரிய பள்ளிவாசல் நிதியில் இருந்தும் பொதுநல அமைப்புகள் மூலமாக  கிடைக்கப்பெறும் நிதிகளின் ஊடாகவும் உடனடியாக மையவாடியினை புனரமைப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதற்கான நிதி ஒதுக்கீடுகள் நேற்றையதினம்  விடுவிப்புச் செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X