2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

பள்ளிவாசல்களுக்கான பதிவுச் சான்றிதழ்கள்

Editorial   / 2019 ஒக்டோபர் 21 , பி.ப. 04:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஷய்பான் அப்துல்லாஹ்

சாய்ந்தமருது பிரதேச செயலகப் பிரிவிலுள்ள பள்ளிவாசல்களை, முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தால் பதிவு செய்யப்பட்டு, அதற்கான பதிவுச் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு, சாய்ந்தமருது பிரதேச செயலகத்தில் அண்மையில் நடைபெற்றது.

சாய்ந்தமருது பிரதேசத்தில் சாய்ந்தமருது ஜூம்ஆப் பெரிய பள்ளிவாசல் உள்ளிட்ட 13 பள்ளிவாசல்களுக்கு, இப்பதிவுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

சாய்ந்தமருது பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தர் எம்.ஐ.ஜூஹைர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பிரதேச செயலக பிரதம இலிகிதர் ஏ.எல்.ஏ.றசீட், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள்  திணைக்கள அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.ஏ.அசீம், கலாசார அபிவிருத்தி உதவியாளர் ஏ.எச்.சபீக்கா, கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆர்.எஸ்.ஜெஸீரா உள்ளிட்ட சாய்ந்தமருது பிரதேச பள்ளிவாசல்களின் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X