Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 15, வியாழக்கிழமை
Editorial / 2020 ஜூன் 24 , பி.ப. 05:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாறுக் ஷிஹான்
மனித பாவனைக்குத் தீங்கு விளைவிக்கும் பங்கஸ் படர்ந்த திராட்சைப் பழங்கள், இன்று (24) கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டுள்ளன.
அம்பாறை - காரைதீவு சந்தியை அண்டிய பகுதிகளில், பழுதடைந்த திராட்சைப் பழங்கள் விற்பனை செய்யப்படுவதாக, கல்முனை பிராந்திய சுகாதாரச் சேவைகள் பணிமனையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஜி.சுகுணனுக்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளது.
இதன்போது, பணிப்பாளர் தலைமையில் சென்ற பொதுச் சுகாதார உத்தியோகத்தர்கள், பெருந்தொகையான பழுதடைந்த திராட்சைப் பழங்களைக் கைப்பற்றினர்.
மேலும், குறித்த அழுகிய திராட்சைப் பழங்களை விற்பனை செய்த விற்பனையாளர்கள் எச்சரிக்கப்பட்டதோடு, பாவனைக்குதவாத பழங்களை, காரைதீவு பிரதேச சபையின் திண்மக் கழிவு அகற்றும் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டு அழிக்கப்பட்டன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
4 hours ago