Princiya Dixci / 2021 ஒக்டோபர் 28 , பி.ப. 01:19 - 0 - {{hitsCtrl.values.hits}}

வி.ரி.சகாதேவராஜா
கிழக்கு மாகாண மக்களுக்கென 2 கோடி ரூபாய்க்கு பால்மா கொள்வனவு செய்யப்பட்டு, சகல கூட்டுறவுச் சங்கங்களினூடாக விநியோகிக்க கிழக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளர் எ.எல்.எம்.அஸ்மியின் நடவடிக்கை எடுத்திருந்தார்.
அதன்படி, 400 கிராம் பால்மா 380 ரூபாய்க்கு (400 கிராம் பால்மாவின் புதிய விலை 480 ரூபாய் ஆகும்) விநியோகிக்கப்பட்டு வருகிறது.
அதன்படி, காரைதீவு ப.நோ.கூ.சங்கத்துக்கு 1,340 பக்கெட் 400 கிராம் பால்மாவும், 53 பக்கெட் 1 கிலோகிராம் பால்மா பக்கெட்டும் கொள்வனவு செய்ததாக அச்சங்கத் தலைவர் வை.கோபிகாந் தெரிவித்தார்.
அத்தோடு, 3 கிலோகிராம் சீனி, 400 கிராம் அங்கர் பால்மா, 200 கிராம் தேயிலை, 1 உப்பு பக்கெட் அடங்கிய 1000 ரூபாய் பெறுமதியான உலருணவுப் பொதியை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.
இது மக்கள் மத்தியில் பலத்த வரவேற்பைப் பெற்றதுடன், இப்பொதியைப் பெற மக்கள் முண்டியடித்தனர்.

15 minute ago
20 minute ago
29 minute ago
43 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
20 minute ago
29 minute ago
43 minute ago