Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 12, திங்கட்கிழமை
வி.சுகிர்தகுமார் / 2019 டிசெம்பர் 19 , பி.ப. 02:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
அம்பாறை மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் எண்ணிக்கையைக் குறைக்காது, அனைவருக்கும் நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படவேண்டுமென, நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன், அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
கடந்த ஒரு மாதகாலமாக அம்பாறை மாவட்ட மக்கள் வெள்ள அனர்த்தத்தால் பல்வேறு வழிகளிலும் பாதிக்கப்பட்டனர்.
இந்நிலையில் பாதிக்கப்பட்டவர்களின் விவரங்களை, பிரதேச செயலகங்கள் ஊடாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையமும் மாவட்டச் செயலகமும் இணைந்து சேகரிக்கும் பணியில் ஈடுபட்டன.
இதற்கமைவாக, பிரதேச செயலகங்கள் வழங்கிய பாதிக்கப்பட்ட குடும்பத் தகவல்கள் அதிகமாக இருப்பதாகத் தெரிவித்து, அதனை குறைப்பதற்குரிய நடவடிக்கையை அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையமும் மாவட்டச் செயலகமும் மேற்கொண்டுள்ளதாக, அறிய முடிகின்றது.
ஆயினும், எக்காரணம் கொண்டும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்ப விவரங்களைக் குறைப்பது பொருத்தமற்றது எனவும் பொதுவாக அனைத்து மக்களும் வெள்ளத்தால் ஏதோ ஒரு வகையில் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் கூறிய கோடீஸ்வரன் எம்.பி, இவ்விடயம் தொடர்பில், மாவட்ட அரசாங்க அதிபருடன் கலந்துரையாடி வருவதாகவும் தெரிவித்தார்.
எவ்வாறாயினும், வெள்ள அனர்த்தத்தால், தொழிலின்றிப் பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் விரைவாக நிவாரணம் வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்குமென நம்புவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
3 hours ago
4 hours ago