Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 14, புதன்கிழமை
Editorial / 2020 மே 08 , பி.ப. 03:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
வி.சுகிர்தகுமார்
கொரோனா தொற்றிலிருந்து மக்களைப் பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் சுகாதாரத் துறையினருக்கு உதவும் வகையில், தனியார் தொண்டு நிறுவனங்களும் பல்வேறு செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றன.
இதற்கமைவாக, அம்பாறை மாவட்ட சிவில் சமூக பாதுகாப்புச் செயற்பாட்டாளர்கள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில், அதன் இணைப்பாளர் இரா.விக்னேஸ்வரனின் முயற்சியின் பயனாக சுகாதாரத் துறையினருக்கான தனிநபர் பாதுகாப்பு அங்கிகளை, உள்ளூரில் தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஜி.சுகுணனின் வேண்டுகோளுக்கமைய, வைத்தியர்கள், வைத்தியசாலை உத்தியோகத்தர்களை பாதுகாக்கும் வகையில் குறித்த பாதுகாப்பு அங்கிகள் தயாரிக்கப்படுவதுடன், சில தொகுதி அங்கிகள், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஜி.சுகுணனிடம் அண்மையில் கையளிக்கப்பட்டும் உள்ளன.
உள்ளூரில் தயாரிக்கப்பட்டுவருகின்ற அங்கிகளுக்கான பொருத்தமான துணியை, மாவட்ட சிவில் சமூக பாதுகாப்பு செயற்பாட்டாளர்கள் ஒன்றியம் பெற்றுக்கொடுத்துள்ளதுடன், அங்கிகளை முற்றும் முழுதாக இலவசமாகத் தைத்துக் கொடுக்கும் அரும்பணியை, அக்கரைப்பற்றை சேர்ந்த விமல் தையல் நிலையத்தின் உரிமையாளர் தலைமையிலான குழுவினர் ஏற்று செயற்பட்டு வருகின்றனர்.
இ.விமலராசன், இ.செகநாதன், த.சுதர்சன், பா.மதியழகன் ஆகிய தையல் இப்பணியை முன்னெடுத்து வருவதுடன், பாதுகாப்பான முறையில் உருவாக்கப்பட்டுவரும் குறித்த அங்கியை, அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் வைத்தியர் டொக்டர் ரெமன்ஸ் உள்ளிட்டவர்களும் பார்வையிட்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago
8 hours ago
9 hours ago