2025 மே 14, புதன்கிழமை

பாதுகாப்பு அங்கிகள் கையளிப்பு

Editorial   / 2020 மே 13 , மு.ப. 10:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம். ஹனீபா

அம்பாறை, அக்கரைப்பற்று அஞ்சல் அத்தியட்சகர் பிரிவுக்குட்பட்ட அஞ்சல் அலுவலகங்களில் கடமையாற்றும் ஊழியர்களுக்கு, சிலக்கோ அமைப்பின் அனுசரணையில் ஒருதொகுதி கொரோனா பாதுகாப்பு அங்கிகள், நிந்தவூர் அஞ்சல் அலுவலகத்தில் வைத்து நேற்று (12) கையளிக்கப்பட்டன.

நிந்தவூர் அஞ்சல் அதிபர் யூ.எல். பைஸர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், சிலக்கோ அமைப்பின் பிரதிநிதியும், கல்முனை ஸாஹிரா கல்லூரியின் சைன்ட் 90 அமைப்பின் தலைவருமான டொக்டர் எம்.எம்.அல் அமீன் றிஸாட், அம்பாறை, அக்கரைப்பற்று அஞ்சல் அத்தியட்சகர் ஆர்.எம்.எம். ஹேமந்தவிடன் பாதுகாப்பு அங்கிகளைக் கையளித்தார்.

தங்களது உயிரை அர்ப்பணித்து, கிளினிக் நோயாளர்களுக்கான மருந்துகளை வீடு வீடாகச் சென்று ஒப்படைப்பததில், அஞ்சல் திணைக்களத்தின் உத்தியோகத்தர்களும், ஊழியர்களும் செயற்பட்டுக் கொண்டிருக்கின்ற இந்தக் காலகட்டத்தில், இவ்வாறான பாதுகாப்பு அங்கிகள் வழங்கப்பட்டிருப்பது வரவேற்கத் தக்கதென, அஞ்சல் அதிபர் யூ.எல்.எம். பைஸர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X