Freelancer / 2023 பெப்ரவரி 04 , மு.ப. 11:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
அம்பாறை - பக்மிட்டியாவ வனப்பகுதியில் ஒரு ஏக்கரில் பயிரிடப்பட்டு வந்த கஞ்சா வெள்ளிக்கிழமை மாலை கட்டுபிடிக்கப்பட்டுள்ளது..
அக்கரைப்பற்று இராணுவப் புலனாய்வுப்பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் மற்றும் அருகம்பை விஷேட அதிரடிப்படையினர் இணைந்து நடத்திய தேடுதலில் பக்மிட்டியாவ வனப்பகுதியில் பயிரிடப்பட்ட கஞ்சா கைப்பற்றப்பட்டது.
இதன் போது சுமார் 7,500 கஞ்சா செடிகள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், அவை ஒவ்வொன்றும் சுமார் 3-6 அடி என உயரம் வரை வளர்ந்திருந்தது.
கைப்பற்றப்பட்ட கஞ்சா செடிகள் அனைத்தும் பாதுகாப்புத் தரப்பினரால் அழிக்கப்பட்டதுடன், மேலதிக விசாரணைகளை தமன பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். R
3 hours ago
25 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
25 Oct 2025