2025 மே 03, சனிக்கிழமை

பாலம் அமைக்க ஏற்பாடு

Princiya Dixci   / 2022 மார்ச் 22 , மு.ப. 08:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

அஸ்லம் எஸ்.மௌலானா

சம்மந்துறை, புளக் ஜே- வெஸ்ட் வண்டு வீதியில் அமைந்துள்ள மஸ்ஜிதுல் பலாஹ் பள்ளிவாசல், அன்வர் இஸ்மாயில் வித்தியாலயம் மற்றும் மையவாடி என்பவற்றை ஊடறுத்துச் செல்லும் கைகாட்டி பிரதான வாய்க்காலுக்கு மேல் பாலம் அமைக்கும் வேலைத்திட்டம், கல்முனை ரஹ்மத் பவுண்டேஷன் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதற்கான அடிக்கல் நடும் நிகழ்வு, அமைப்பின் மஷூரா குழுத் தலைவர் அல்ஹாபிழ் எம்.இர்பான் தலைமையில் நேற்று (21)  நடைபெற்றது.

இத்திட்டத்துக்கு வை.டபிள்யூ.எம்.ஏ. நிறுவனம் முழுமையான அனுசரணை வழங்கி வருவதாகவும் குறுகிய காலத்தினுள் மேம்பால நிர்மாண வேலைகள் பூர்த்தி செய்யப்படும் எனவும் ரஹ்மத் பவுண்டேஷன் ஸ்தாபகத் தலைவர் ரஹ்மத் மன்சூர் இதன்போது தெரிவித்தார்.

இப்பிரதேச பொது மக்களின் நீண்ட காலத் தேவையாக இருந்து வருகின்ற இப்பாலத்தை அமைத்துத் தருவதற்கு நடவடிக்கை எடுத்தமைக்காக ரஹ்மத் மன்சூருக்கு இதன்போது நன்றியும் பாராட்டும் தெரிவிக்கப்பட்டதுடன், விசேட துஆப் பிரார்த்தனையும் மேற்கொள்ளப்பட்டது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X