Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
எம்.எஸ்.எம். ஹனீபா / 2019 மார்ச் 07 , பி.ப. 05:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையிலுள்ள வைத்தியசாலைகளில் காணப்படுகின்ற இயன் மருத்துவ (பிசியோதெரபி) பிரிவுகளை, வெளிநாட்டு நிதியுதவியின் மூலமாக நவீன உபகரணங்களைக் கொண்டு மேம்படுத்தவுள்ளதாக, சுகாதார இராஜாங்க அமைச்சர் பைசால் காசிம் தெரிவித்தார்.
அரச இயன்மருத்துவ அதிகாரிகள் சங்கg; பிரதிநிதிகளுக்குமிடையிலான கலந்துரையாடல், கொழும்பில் நேற்று (06) இடம்பெற்றதாகவும், அவர் கூறினார்.
நாடளாவிய ரீதியில் காணப்படுகின்ற இயன் மருத்துவப் பிரிவுகளில் நிலவும் குறைபாடுகளும் அவற்றை அபிவிருத்தி செய்ய வேண்டிய தேவைகள் தொடர்பாகவும், இயன் மருத்துவ சங்கப் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடியுள்ளதாகவும், அவர் தெரிவித்தார்.
இயன் வைத்திய பிரிவை மேம்படுத்தினால் நாட்டில் பெறுமதிமிக்க சேவையை எதிர்காலத்தில் வழங்கக் கூடியதாக இருக்கும் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
இது தொடர்பான வரைபுகளை உடனடியாக வழங்குமாறு, இயன் மருத்துவ சங்கத்தின் தம்மிக்க கோரலாகே, பிரதிநிதிகளிடம் கோரியுள்ளதாகவும், இராஜாங்க அமைச்சர் பைசால் காசிம் மேலும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .