2025 மே 05, திங்கட்கிழமை

‘பிரஜைகள் ஒவ்வொருவரும் அடிப்படைச் சட்டத்தை அறிய வேண்டும்’

எம்.எம்.அஹமட் அனாம்   / 2019 மார்ச் 25 , மு.ப. 10:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

நாட்டின் பிரஜைகள் ஒவ்வொருவரும் இந்நாட்டின் அடிப்படைச் சட்டங்களை அறிந்திருக்க வேண்டுமென, கல்முனை நீதிபதி ஐ.என்.றிஸ்வான் தெரிவித்தார்.

ஓட்டமாவடி தேசிய பாடசாலையின் 2018ஆம், 2019ஆம் ஆண்டுக்கான மாணவத் தலைவர்களுக்கு நியமனக் கடிதங்கள் வழங்கலும் சின்னம் சூட்டுதலும், கல்லூரி முதல்வர் எம்.ஏ.ஹலீம் இஸ்ஹாக் தலைமையில், நேற்று முன்தினம் (23) நடைபெற்றது.

இந்த நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், நாட்டுப் பிரஜைகள் ஒவ்வொருவரும் அடிப்படைச் சட்டத்தை நன்கு தெரிந்தவராக இருப்பார்களேயானால், எந்த இடத்திலும் எந்த நபரிடமும் முகங்கொடுக் கூடிய தைரியம் இருக்குமென்றார்.

சட்டம் பற்றிய அறிவு ஒருவரிடம் இல்லை என்றால், அவரை மற்றவர்கள் எளிதாக மட்டம் தட்டிவிட்டுப்போகலாம் எனவும் அவருக்குக் கிடைக்க வேண்டிய உரிமைகள் சிலவேளைகளில் கிடைக்காமலும் போகலாம் எனவும் நீதிபதி தெரிவித்தார்.

எனவே, நாட்டின் அடிப்படைச் சட்டங்களை அறிந்துகொள்வதற்கு ஒவ்வொரு பிரஜையும் முயற்சிக்க வேண்டுமென, அவர் கோரிக்கை விடுத்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X