2025 மே 06, செவ்வாய்க்கிழமை

பிரதேச அமைப்பாளர்கள் நியமனம்

Editorial   / 2019 ஏப்ரல் 16 , பி.ப. 01:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எல்.எஸ்.டீன்

ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்டத்திலுள்ள பிரதேச அமைப்பாளர்களுக்கான நியமனம் வழங்கும் நிகழ்வு, கட்சியின் செயலாளர் ஹசன் அலியின் நிந்தவூர் இல்லத்தில் அண்மையில் நடைபெற்றது.

இதன்போது, சம்மாந்துறை அமைப்பாளராக எம்.எல். நாஸர், இளைஞர் அமைப்பாளராக ஏ.பி.எம். சியாம், நாவிதன்வெளி இளைஞர் அமைப்பாளராக மெளலவி ஏ.பி.கால்தீன் ஆகியோருக்கு, கட்சியின் தவிசாளர் பஷீர் சேகுதாவூத், செயலாளர் எம்.ரி. ஹசன் அலி ஆகியோர்  நியமனக் கடிதங்களை வழங்கி வைத்தனர்.

இந்நிகழ்வில் ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் தேசிய அமைப்பாளர் இர்பான் முகைதீன், உயர்பீட உறுப்பினர்கள் ஏ.எம். அவூபர், கே.எல். சமீம் உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X