2025 மே 14, புதன்கிழமை

’புடவைக் கடைகளுக்கு செல்ல வேண்டாம்’

Editorial   / 2020 மே 13 , பி.ப. 03:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

அஸ்லம் எஸ்.மௌலானா

ரமழான் பெருநாளுக்கான புத்தாடைகளைக் கொள்வனவு செய்வதற்காக புடவைக் கடைகளுக்கு பெண்கள் செல்வதைத் தவிர்ந்துக் கொள்ளுமாறு, அம்பாறை மாவட்ட ஜம்மியத்துல் உலமா சபை, அம்பாறை மாவட்ட பள்ளிவாசல்கள் சம்மேளனம் என்பன கூட்டாக வேண்டுகோள் விடுத்துள்ளன.

இவ்விடயத்தை வலியுறுத்தி, இவை இன்று (13) வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

“ஊரடங்குச் சட்டம் தற்போது பகல் வேளையில் முழுமையாகத் தளர்த்தப்பட்டிருக்கின்ற சூழ்நிலையில், மக்களிடையேயான சமூக இடைவெளி உள்ளிட்ட சுகாதார நடைமுறைகள் தொடர்ந்தும் பேணப்பட வேண்டியதன் அவசியத்தை சுகாதாரத்துறை வலியுறுத்தி வருகின்றது. இக்கட்டுப்பாடுகள் கண்டிப்பாக கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்கின்ற நிபந்தனையுடனேயே, அரசாங்கம் ஊரடங்கு சட்டத்தை தளர்த்தியிருக்கிறது.

“இந்நிலையில், முஸ்லிம்கள் தற்போது றமழான் நோன்பை அனுஷ்டித்து வருவதுடன், சில நாள்களில் வரவுள்ள பெருநாளை கொண்டாடுவதற்கான தயார்படுத்தல்களிலும் எமது மக்கள் ஈடுபடுகின்றனர்.

“இத்தருணத்தில் நாம் விடுக்கும் வேண்டுகோள் யாதெனில், புத்தாடை கொள்வனவுக்காக பெண்கள் கடைத்தெருக்களுக்கும் புடவைக் கடைகளுக்கும் செல்வதை முற்றாகத் தவிர்த்து, ஒவ்வொரு குடும்பத்தின் சார்பிலும் ஆண்கள் மாத்திரம் சுகாதார முறைமைகளை கடைப்பிடித்தவாறு, உரிய இடங்களுக்கு சென்று குறுகிய நேரத்தினுள் தேவையான ஆடைகளையும் பொருள்களையும் கொள்வனவு செய்து கொண்டு, வீடுகளுக்குத் திரும்புங்கள்” என அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X