Editorial / 2018 செப்டெம்பர் 08 , மு.ப. 11:59 - 0 - {{hitsCtrl.values.hits}}

வி. சுகிர்தகுமார்
அரசாங்கத்தின் ஸ்ரீ லங்கா என்டபிரைசஸ் வேலைத்திட்டத்துக்கு இணைவாக, சமுர்த்தி வங்கிகளும் சமுர்த்தித் திணைக்களத்தின் ஆலோசனைகளுக்கு அமைய, பல்வேறு சுயதொழில் வாய்ப்பு வேலைத்திட்டங்களை தேசிய ரீதியில் அறிமுகப்படுத்தி வருகின்றது.
இதற்கமைவாக, அம்பாறை மாவட்டம், ஆலையடிவேம்பு பிரதேச செயலக பிரிவிலும் முன்னுதாரணமான புதிய தொழில் முயற்சியாளர்களுக்கான சுயதொழில் கடன்களை வழங்கும் திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
ஆலையடிவேம்பு தெற்கு சமுர்த்தி வங்கியினூடாக சமுர்த்திப் பயனாளி ஒருவருக்கு, அவரது மரக்கறி வியாபாரத்தை ஊக்குவிக்கும் பொருட்டு, ஆட்டோவொன்று, ஒப்பந்த அடிப்படையில் நேற்று (07) பெற்றுக் கொடுக்கப்பட்டது.
வங்கியின் முகாமையாளர் கே.அசோக்குமார் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தின் உதவிப் பிரதேச செயலாளர் ரி.கஜேந்திரன் மற்றும் தலைமையக முகாமையாளர் என்.கிருபாகரன் ஆகியோர் கலந்துகொண்டு, ஆட்டோ வாகனத்தை, உரிமையாளரிடம் கையளித்தனர்.
தொடர்ந்து கடந்த சித்திரைப்புத்தாண்டின் போது சமுர்த்தி வங்கியில் அதிகமான தொகையை வங்கிப்புத்தகத்தில் சேமிப்பு வைப்பு செய்தவர்களுக்கு மின்விசறி , குடை, சிறிய அன்பளிப்பு பொருட்களும் வழங்கி வைக்கப்பட்டன.
நிகழ்வில் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கங்களின் தலைவிகள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
24 Jan 2026
24 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 Jan 2026
24 Jan 2026