2025 மே 12, திங்கட்கிழமை

‘புதிய யுகம் படைக்க அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும்’

ரீ.கே.றஹ்மத்துல்லா   / 2019 டிசெம்பர் 17 , பி.ப. 05:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இளைஞர், யுவதிகள் தங்களது திறன் நுட்பம், மதிநுட்பங்களை விருத்தி செய்து புதிய யுகம் படைக்க அர்ப்பணிப்புடன்செயற்பட வேண்டுமென, தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் அபிவிருத்திப் பொறுப்புப் பணிப்பாளர் பிரபாத் லியனக்க தெரிவித்தார்.

இளைஞர் விவகார அமைச்சும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றமும் இணைந்து ஏற்பாடு செய்து, நடைமுறைப்படுத்தி வரும் இளைஞர் முகாம் நிகழ்ச்சித்திட்டம், அட்டாளைச் சேனை பிரதேசத்தில் இன்று (17) ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றுகையில், அவர் இவ்வாறு கூறினார்.

மூன்று நாள்களைக் கொண்டு வதிவிடமாக இடம்பெறும் இந்த இளைஞர் முகாமில் அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்துக்குட்பட்ட அட்டாளைச்சேனை, பாலமுனை, ஒலுவில், தீகவாபி, திராய்க்கேணி, ஆலங்குளம், அஸ்ரப் நகர் கிராமங்களிலுள்ள இளைஞர், யுவதிகள் பலர் கலந்துகொண்டுள்ளனர்.

அட்டாளைச்சேனை பிரதேச செயலக இளைஞர் சேவைகள் உத்தியோகத்தர் பீ.எம்.றியாத் தலைமையில் நடைபெற்ற ஆரம்ப நிகழ்வில், அட்டாளைச்சேனை பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலாளர் எம்.ஏ.சீ.அஹமட் நஸீல், தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் அபிவிருத்தி உதவிப் பணிப்பாளர் நளின் அநுப்பெரும உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

பணிப்பாளர் பிரபாத் லியனக்க அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில்: “இளைஞர்களை, நாட்டின் கல்வித்துறை, பொருளாதாரம், அபிவிருத்தி, இன ஐக்கியத்துக்கும் பங்களிப்புச் செய்யக் கூடியவர்களாகவும், எதிர்காலத் சிறந்த ஆளுமை நிறைந்த தலைவர்களை உருவாக்கும் நோக்குடனும் இவ்வாறான இளைஞர் முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X