2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

புதையலில் தோண்டப்பட்ட கருப்பு தங்கத்துடன் ஒருவர் கைது

Princiya Dixci   / 2022 ஓகஸ்ட் 21 , மு.ப. 11:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாறுக் ஷிஹான்

புதையல் அகழ்வில் தோண்டி எடுக்கப்பட்ட தங்கம் எனக் கூறி அதனை விற்பனை செய்ய முயன்ற சந்தேகநபர்,  கல்முனை  விசேட அதிரடிப் படையினரால்  கைது செய்யப்பட்டுள்ளார்.

கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலுக்கமைய, அம்பாறை - திருக்கோவில்  பொலிஸ் பிரிவுக்குட்பட்ட  கோரக்களப்பு குளத்துக்கு அருகில் வைத்து கல்முனை  விசேட அதிரடிப்படையினரால்  இக்கைது இடம்பெற்றுள்ளது.

கோமாரி பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சந்தேகநபர் வசம் இருந்து 20 இலட்சம் ரூபாய் பெறுமதியான  350 துண்டுகள் அடங்கிய  113 கிராம் 180 மில்லி கிராம்  எடையுடைய ஒரு தொகுதி  கருப்பு பொன்நிற கற்கள், கல்முனை விசேட அதிரடிப் படையினரால் மீட்கப்பட்டுள்ளன.

பின்னர்  கைதுசெய்யப்பட்ட நபர், சான்று பொருட்களுடன் நீதிமன்ற நடவடிக்கைக்காக திருக்கோவில் பொலிஸாரிடம் விசேட அதிரடிப் படையினர் பாரப்படுத்தியுள்ளனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .