2025 மே 12, திங்கட்கிழமை

‘புலமைப்பரிசில் பரீட்சையில்கிழக்கில் அமோக பெறுபேறு’

Editorial   / 2019 ஒக்டோபர் 09 , பி.ப. 03:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

சகா

கிழக்கு மாகாணம் கடந்த காலத்தைவிட இம்முறை தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் அமோக பெறுபேறுகளைப் பெற்று சாதனை படைத்துள்ளதாக, கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.கே.எம்.மன்சூர் தெரிவித்தார்.

கிழக்கு மாகாணத்தில் கடந்தாண்டு பெற்ற பெறுபேற்றின்படி, 2,565 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்குமேல் பெற்றிருந்தனர் எனவும் இவ்வாண்டு 3,716 மாணவர்கள் பெற்றுள்ளனர் எனவும் தெரிவித்த மாகாண கல்விப் பணிப்பாளர், 1,151 மாணவர்களால் அத்தொகை அதிகரித்துள்ளதாகவும் அதாவது கிழக்கு மாகாணம் கடந்தாண்டைவிட 55.51 சதவீத வளர்ச்சி அதிகரிப்பைக் காட்டுவதாகவும் தெரிவித்தார்.

இதேவேளை, அம்பாறை - சம்மாந்துறை வலயம் 109 சதவீத அதிகரிப்பைக்காட்டி முதலிடத்தில் திகழ்வதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X