2025 மே 03, சனிக்கிழமை

பெண் உத்தியோகத்தர்களுக்கு பாராட்டு

Princiya Dixci   / 2022 மார்ச் 15 , மு.ப. 09:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

.எல்.எம்.ஷினாஸ் 

மருதமுனை பிரதேசத்தில் மிக நீண்டகாலமாக கடமையாற்றி வரும் பெண் கிராம சேவை உத்தியோகத்தர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள் மற்றும் ஓய்வுநிலை  உத்தியோகத்தர்களை பாராட்டிக் கௌரவிக்கப்பட்டனர்.

இந்த நிகழ்வு, பெரியநீலாவணை புலவர்மணி சரிபுத்தீன் மஹா வித்தியாலயத்தில், பாடசாலையின் அதிபர் எம்.எம். முகம்மது நியாஸ் தலைமையில் நேற்று (14) நடைபெற்றது.

சர்வதேச மகளிர் தினத்தையொட்டி ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வில், கொரோனா தொற்றுக் காலகட்டத்தில் கிராம மட்டத்தில் அர்ப்பணிப்புடன் சேவையாற்றிய மேற்படி பெண் உத்தியோகத்தர்களே கௌரவிக்கப்பட்டனர்.

இந்த நிகழ்வின் பிரதம அதிதியாக மருதமுனை பிரதேசத்தின் முதல் பெண் கலாநிதியும் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் உதவி நூலகருமான முஹம்மட் மஜீத் மஸ்றூபா கலந்துகொண்டார்.

கௌரவிக்கப்பட்ட பெண் உத்தியோகத்தர்களுக்கு பாடசாலையின் பெண் ஆசிரியர்களால் சிறப்பு அன்பளிப்புப் பொருள் வழங்கி வைக்கப்பட்டதுடன், பாடசாலையின் வாசிகசாலைக்கு ஒரு தொகுதி நூல்களும் வழங்கப்பட்டன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X