2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான பயணம் திருக்கோவிலை வந்தடைந்தது

வி.சுகிர்தகுமார்   / 2019 பெப்ரவரி 28 , பி.ப. 05:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1,000 ரூபாய் அடிப்படைச் சம்பளம், தனி வீடு கோரி, துவிச்சக்கரவண்டியில் இலங்கையை சுற்றிவரும் வவுனியாவைச் சேர்ந்த தர்மலிங்கம் பிரதாபன், நேற்று (27) மாலை திருக்கோவில் பிரதேசத்தை வந்தடைந்தார்.

இவரை, திருக்கோவில், நேருபுரத்தில் அமைந்துள்ள ஸ்ரீரடிசாய் கருணாலயத்தின் முன்பாக, கருணாலையத்தின் நிர்வாகத்தினர் வரவேற்று, தேனீர் உபசாரங்களை அளித்து, வாழ்த்தி, கல்முனை நோக்கி வழியனுப்பி வைத்தனர்.

தர்மலிங்கம் பிரதாபன், பெப்ரவரி 10ஆம் திகதி, வவுனியா - கோவில்குளம் சிவன் ஆலயத்தின் முன்பாக இருந்து தனது துவிச்சக்கரவண்டி சுற்றுப் பயணத்தை ஆரம்பித்திருந்தார்.

இவரின் துவிச்சக்கரவண்டிப் பயணமானது 2125 கீ.மீற்றர் தூரம் கொண்டதாகத் திட்டமிடப்பட்டுள்ளதுடன், இச்சுற்றுப் பயணம், மார்ச் மாதம் 13ஆம் திகதி, யாழ். பல்கலைக்கழகத்தில் நிறைவுபெறவுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X