2025 மே 12, திங்கட்கிழமை

‘பெறுபேறுகளை கொண்டு மாணவர்களை தரம் பிரிக்க முடியாது’

Editorial   / 2019 டிசெம்பர் 02 , பி.ப. 02:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

சலீம் றமீஸ்

“பரீட்சையில் தோற்றிய மாணவர்களின் பெறுபேறுகளை வைத்து, அவர்களின் திறமைகளைத் தரம் பிரிக்க முடியாது” என, அட்டாளைச்சேனை பிரதேச கோட்டக் கல்வி அதிகாரி எம்.ஏ.சி.கஸ்ஸாலி தெரிவித்தார்.

அட்டாளைச்சேனை அல்-அர்ஹம் வித்தியாலத்தின் வருடாந்த இறுதி  நிகழ்ச்சி, அதிபர் ஏ.எம்.எம். இத்ரீஸ் தலைமையில் பாடசாலை மண்டபத்தில் அண்மையில் நடைபெற்றபோது, இதில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்து அவர் கூறுகையில், “பாடசாலை பரீட்சைகளில் விசேடமாக ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் தோற்றுகின்ற மாணவர்களின் பெறுபேறுகளைக் கொண்டு அவர்களது எதிர்கால கல்வி நிலைமைகளை கனிப்பீட முடியாது.

“கடினமான கல்வி கற்றல், பயிற்சி மூலமாகவே ஐந்தாம் ஆண்டு பரீட்சையில் தோற்றுகின்றனர். இப்பயிற்சியை, கல்விப் பொதுதராதரப் பரீட்சை தொடர்க்கம் பல்கலைக்கழகம் வரையிலான கல்விக்குத் தொடர்ந்தும் வழங்க, பெற்றோர்கள் கூடிய கவனம் செலுத்த வேண்டும்” எனவும் கோட்டக் கல்வி அதிகாரி மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X