2025 மே 15, வியாழக்கிழமை

‘பொதுஜனவின் வெற்றி உறுதி’

Editorial   / 2020 ஜூன் 16 , பி.ப. 03:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாறுக் ஷிஹான்

நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் வெற்றி உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக, அக்கட்சியின் சம்மாந்துறை தொகுதி வேட்பாளர் சமாதான நீதவான் அஸ்பர் உதுமாலெப்பை தெரிவித்தார்.

அம்பாறை, திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில்,  சம்மாந்துறை தொகுதியில்  ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியில் முதன்மை வேட்பாளராகக் களமிறங்கியுள்ள இவர், விசேட செய்தியாளர் சந்திப்பை, இன்று (16) நடத்தினார்.

இங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, கடந்த காலங்களில் முஸ்லிம் தலைமைகளின் கதைகளைக் கேட்டு,  செயலற்றுப் போயுள்ளமையை உணர்ந்து செயற்பட வேண்டுமென்றார்.

அதேவேளை, “முஸ்லிம் தலைமைகளின் கதைகளைக் கேட்டு செயற்பட்ட எமது மக்கள், ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் அவர்களின் இனவாதப் போக்கை உணர்ந்து, ஆட்சியில் பங்காளார்களாக செயற்பட தயாராகி விட்டனர்” என்றும் அவர் மேலும் தெரிவித்தார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .