2025 மே 15, வியாழக்கிழமை

பொதுமக்களுக்கான ’ஸ்மாட்’ சேவை ஆரம்பம்

Editorial   / 2020 ஜூன் 17 , பி.ப. 04:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எல்.எம்.ஷினாஸ்

அம்பாறை மாவட்டத்தில் முதல் முறையாக கல்முனை பிரதேச செயலகத்தில், பொதுமக்களுக்கு வினைத்திறனான சேவையை வழங்குவதற்கென குளிரூட்டப்பட்ட 'ஸ்மாட்' சேவை நிலையம், பிரதேச செயலாளர் எம்.எம்.நஸீர் தலைமையில், இன்று (17) திறந்து வைக்கப்பட்டது.

பல்வேறு இட நெருக்கடிகளுக்கு மத்தியில் இயங்கிவரும் கல்முனை பிரதேச செயலகத்தினூடாக, 29 கிராம சேவையாளர் பிரிவுகளிலுமுள்ள 14,500 குடும்பங்களுக்குச் சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், பொதுமக்கள் சேவை தினங்களான திங்கள், புதன் கிழமைகளில் அலுவலகத்துக்கு வந்து கடமையாற்றும் கிராம சேவை அதிகாரிகள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், ஏனைய வெளிக்கள உத்தியோகத்தர்கள் தங்கு தடையின்றி, பொதுமக்களுக்குச் சேவை வழங்குவதற்கு இந்தப் புதிய சேவை நிலையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .