Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 08, வியாழக்கிழமை
Editorial / 2019 ஓகஸ்ட் 22 , பி.ப. 06:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
றியாஸ் ஆதம்
பொத்துவில் ஆதார வைத்தியசாலை அபிவிருத்திக் குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்ட வைத்தியசாலை உத்தியோகத்தர்களுடனான சினேகபூர்வ சந்திப்பும் சேவை நலன் பாராட்டு நிகழ்வும் வைத்தியசாலை அபிவிருத்திக் குழுவின் தலைவர் சட்டத்தரணி எஸ்.ஏ.அஹமட் முனாசுதீன் தலைமையில் அறுகம்பே சனிப்பா ஹோட்டலில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் போது, வைத்தியசாலையில் அர்ப்பணிப்புடன் சேவையாற்றிய வைத்திய அத்தியட்சகர், பொது வைத்திய நிபுணர், பொது சத்திரை சிகிச்சை நிபுணர், வைத்தியர்கள், மற்றும் உத்தியோகத்தர்களது சேவையினை பாராட்டி நினைவுச் சின்னங்களும் வழங்கப்பட்டன.
பொத்துவில் ஆதார வைத்தியசாலையில், வைத்திய அத்தியட்சகராகக் கடமையாற்றி திருக்கோவில் ஆதார வைத்தியசாலைக்கு வைத்திய அத்தியட்சகராக இடமாற்றம் பெற்றுச்சென்ற டொக்டர் டீ.எஸ்.ஆர்.டீ.ஆர்.ரஜாப் இந்நிகழ்வின் போது பொன்னாடை போர்த்தி நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.இதனையடுத்து வைத்தியசாலை அபிவிருத்திக் குழு உறுப்பினர்களுக்கான அடையாள அட்டையினை பொத்துவில் ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டொக்டர் ஐ.எல்.எம்.றிபாஸ் வழங்கி வைத்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
7 hours ago
7 hours ago