2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

பொருளாதார பிரச்சினைக்கு சகலரும் தீர்வு தர வேண்டும்

Princiya Dixci   / 2022 மே 02 , மு.ப. 10:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாறுக் ஷிஹான்

நாட்டின் தற்போதைய அசாதாரண சூழலை கருத்தில் கொண்டு, ஒற்றுமையாக அனைவரும் தீர்வொன்றை பெற போராட வேண்டுமென, கல்முனை பொதுச் சந்தை வர்த்தக சங்கச் செயலாளர் ஏ.எல்.கபீர் தெரிவித்தார்.

தொழிலாளர் தினத்தை ஏனைய நாடுகள் மிக விமர்சையாக கொண்டாடிய நிலையில், எமது நாட்டு ஊழியர்கள் மிகவும் வறுமையில் உள்ளார்கள் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

சர்வதேச தொழிலாளர் தினம் தொடர்பில், கல்முனை பொதுச் சந்தை வர்த்தக சங்க அலுவலகத்தில்  நேற்று (01) மாலை நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்ட போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்துரைக்கையில், “எமது நாட்டின் பொருளாதார சிக்கல் மற்றும் ஸ்திரமற்ற அரசாங்கம் இது போன்ற பல சிக்கல்களுக்கு மத்தியில் இந்த தொழிலாளர் தினம் அனுஷ்டிக்கின்ற துப்பார்க்கிய நிலைக்கு இந்த நாட்டு மக்கள் தள்ளப்பட்டுள்ளமை வேதனையாக உள்ளது.

“எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நாட்டில் உள்ள ஊழியர்களின் நலனில் அக்கறை கொள்ள வேண்டும். தற்போதைய வாழ்க்கை செலவு, ஊழியர்கள் மத்தியில் சிரமங்களை கொடுக்கின்றது.

“கல்முனை பொதுச்சந்தையானது குறைந்த ஊழியர்களை கொண்டு சிறப்பாக இயங்கிய ஒரு சந்தையாகும். இன்று இச்சந்தை வெறிச்சோடிக் காணப்படுகின்றது. எவ்வித வியாபாரங்களும் இல்லாமல் தொழிலாளர்கள் சிரமங்களை எதிர் நோக்கியுள்ளனர்.

“எனவே, ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர், நாட்டின் ஊழியர்களின் நிலைமைகளை கவனத்தில்கொண்டு நாட்டில் உள்ள சகல பொருளாதார பிரச்சினைகளை சீர்செய்ய ஏனைய கட்சிகளுடன் இணைந்து தீர்வொன்றை பெற்றுத்தர வேண்டும் என மிக வினயமாக கேட்டுக்கொள்கின்றோம்” என்றார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .