2025 மே 08, வியாழக்கிழமை

‘போக்குவரத்துச் சட்டத்தை மீறினால் இறுக்கமான நடவடிக்கை’

எம்.எஸ்.எம். ஹனீபா   / 2019 ஓகஸ்ட் 27 , பி.ப. 03:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

அம்பாறை, சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் போக்குவரத்து நடைமுறைகளை மீறும் வாகன சாரதிகளைக் கைதுசெய்வதற்கான விசேட வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக, சம்மாந்துறை பொலிஸ் நிலைய மோட்டார் போக்குவரத்துப் பொறுப்பதிகாரி பீ.ரி. நஸீர் தெரிவித்தார்.

மோட்டார் சைக்கிளின் பெற்றோல் தாங்கியின் மேல் இருத்திப் பிள்ளைகளைக் கொண்டு செல்பவர்கள் மீதும் பாதுகாப்புத் தலைக்கவசம் அணியாமல் செல்பவர் மீதும் இறுக்கமான நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அத்துடன், பாடசாலைப் பிள்ளைகளை ஏற்றிச் செல்லும் போது, மேலதிகமான பிள்ளைகளை ஓட்டோ சாரதிகள் ஏற்றிச் செல்ல வேண்டாம் எனவும் உள்வீதிகளுக்கு காபட், கொங்கிறீட் வீதி போடப்பட்டுள்ளதால் உள்வீதி என்று நினைத்துக் கொண்டு தலைக்கவசமில்லலாமல் செல்ல வேண்டாம் எனவும் உள்வீதியில் தான் அதிகமான விபத்துகள் ஏற்படும் மரணங்களும் ஏற்பட்டுள்ளதாகவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு வாகன விபத்துகளால் தேவையற்ற வகையில் ஏற்படும் அதிகமான உயிரிழப்புகளைக் கட்டுப்படுத்தவதற்கு பொதுமக்களும் வாகன சாரதிகளும் சட்டங்களைக் கடைபிடிக்கமாறும், பொலிஸ் நிலைய மோட்டார் போக்குவரத்துப் பொறுப்பதிகாரி கேட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X