எஸ்.கார்த்திகேசு / 2019 ஒக்டோபர் 13 , பி.ப. 02:51 - 0 - {{hitsCtrl.values.hits}}

தேசிய நூலக ஆவணவாக்கல் சேவைகள் சபையின் அறிவுறுத்தலின் பிரகாரம், வாசிப்பு மாதத்தையொட்டி, அம்பாறை - திருக்கோவில் பிதேச சபையின் தம்பிலுவில் பொது நூலகம், பாடசாலை மாணவர்களிடம் இருந்து ஆக்கத்திறன் போட்டிகளுக்கான விண்ணப்பங்களைக் கோரியுள்ளது.
இதனடிப்படையில், “வாசிக்கும் சமூகத்தை உருவாக்க சிறுவர்களிடம் இருந்து ஆரம்பிப்போம்” எனும் தொனிப்பொருளுக்கு அமைவாக, தரம் 10, 11, 12 மாணவர்களுக்கான கட்டுரைப் போட்டிகள், தரம் 06, 07, 08 மாணவர்களுக்கான பேச்சுப் போட்டிகள், திருக்குறல் மனனம் செய்தல், தரம் 03, 04, 05 மாணவர்களுக்கான வாசிப்பு, கதை சொல்லுதல் போட்டிகளுக்குமான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
விண்ணப்பங்களை, இம்மாதம் 20ஆம் திகதிக்கு முன்பாக, பாடசாலை அதிபர்பளின் ஊடாக, திருக்கோவில் பிரதேசசபை செயலாளருக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
தேசிய வாசிப்பு மாதத்தின் இறுதி நிகழ்வுகள், திருக்கோவில் பிரதேசசபையின் தவிசாளர் இ.வி.கமலராஜன் தலைமையில், தம்பிலுவில் பொது நூலகத்தில் இம்மாதம் 29ஆம் திகதி நடைபெறவுள்ளன.
7 hours ago
9 hours ago
06 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
9 hours ago
06 Nov 2025