Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 03, சனிக்கிழமை
எம்.எஸ்.எம். ஹனீபா / 2018 ஜூலை 05 , பி.ப. 03:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிழக்கு மாகாண பொதுச் சேவையில் முகாமைத்துவ உதவியாளர் (தொழில்நுட்பம் அல்லாத) தரம் iii பதவிக்கு சேர்த்துக் கொள்வதற்கான திறந்த மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப் பரீட்சைகள், முறையே எதிர்வரும் 14ஆம், 15ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளதாக, கிழக்கு மாகாண பொது ஆணைக்குழுவின் செயலாளர் எச்.டி. அசின்சலா செனெவிரத்தன, இன்று (05) தெரிவித்தார்.
அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய பரீட்சை நகரங்களில் முற்பகல் 9 மணி தொடக்கம் பிற்பகல் 1 மணி வரை இவை நடைபெறவுள்ளன.
பரீட்சைக்கு விண்ணப்பித்த சகல பரீட்சார்த்திகளுக்கும் இப்பரீட்சைக்கான அனுமதி அட்டைகள், தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், அனுமதி அட்டை, எதிர்வரும் 10ஆம் திகதிக்கு முன்னர் கிடைக்கப்பெறாதவர்கள் அல்லது அனுமதி அட்டைகளில் ஏதாவது திருத்தங்கள் இருப்பின், 026-2220092 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொள்ளுமாறும் அவர் கேட்டுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
28 minute ago
2 hours ago
3 hours ago