2025 மே 12, திங்கட்கிழமை

போதை மாத்திரை வைத்திருந்த மாணவனுக்கு மறியல்

Editorial   / 2019 ஒக்டோபர் 08 , பி.ப. 03:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாறுக் ஷிஹான்

கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மருதமுனை பகுதியில், போதை மாத்திரையுடன், 18 வயது மாணவன் ஒருவர், விசேட அதிரடிப்படையினரால்  கைது செய்யப்பட்டுள்ளார்.

மருதமுனையில் உள்ள பிரபல பாடசாலையொன்றில் உயர் தரத்தில் கல்வி பயிலும்  மாணவர் ஒருவரே, இவ்வாறு கைதுசெய்யப்பட்டவராவார்.

கைது சைய்யப்பட்ட  மாணவனிடம் இருந்து 1,050 ரூபாய் பெறுமதியான போதை மாத்திரைகள்  கைப்பற்றப்பட்டன

கைதுசெய்யப்பட்ட மாணவன்,  கல்முனை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

இவ்வாறு ஒப்படைக்கப்பட்ட மாணவனை, கல்முனை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பொது, அவரை ஒக்டோபர் 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X