Janu / 2025 செப்டெம்பர் 23 , மு.ப. 10:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
இளைஞர்களை இலக்கு வைத்து நீண்ட காலமாக போதைப் பொருள் வியாபாரத்தில் செய்துவந்த பிரதான சந்தேக நபர் உள்ளிட்ட குழுவினரை சம்மாந்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வளத்தாப்பிட்டி இஸ்மாயில் புரம் புதிய கிராமம் பகுதியில் போதைப் பொருள் வியாபாரம் நூதனமான முறையில் முன்னெடுக்கப்படுவதாக சம்மாந்துறை ஊழல் ஒழிப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது 28 வயதுடைய இரு சந்தேக நபர்களும் 25 ,40 வயது சந்தேக நபர்களும் திங்கட்கிழமை(22) அன்று கைது செய்யப்பட்டனர்.
கைதானவர்கள் வளத்தாப்பிட்டி இஸ்மாயில் புரம் கல்லரிச்சல் 04 பகுதி வளத்தாப்பிட்டி இஸ்மாயில் புரம் புதிய கிராமம் பகுதி சம்மாந்துறை 03 பகுதியை சேர்ந்தவர்கள் என தெரியவருகிறது.
மேலும் அவர்களிடமிருந்து 2321 மில்லிகிராம் ஐஸ் போதைப் பொருள், 380 மில்லிகிராம் ஹெரோயின் போதைப் பொருள், ஒரு தொகை பணம், 3 கையடக்கத் தொலைபேசிகள், 3 பவர் பேங்க், 3 வங்கி அட்டை என்பன மீட்கப்பட்டிருந்தன.
மேலும் சந்தேக நபர்கள் உள்ளிட்ட சான்றுப் பொருட்கள் சட்ட நடவடிக்கைகளுக்காக சம்மாந்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சந்தேக நபர்களில் மூவர், நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டு கைது செய்யப்படாமல் தலைமறைவாகி இருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
பாறுக் ஷிஹான்

01 Dec 2025
01 Dec 2025
01 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
01 Dec 2025
01 Dec 2025
01 Dec 2025