2025 மே 05, திங்கட்கிழமை

போதைப்பொருள் அற்ற பொத்துவில்

எம்.எஸ்.எம். ஹனீபா   / 2019 மார்ச் 18 , பி.ப. 02:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

போதைப்பொருள் ஒழிப்பு விசேட வேலைத்திட்டத்துக்கமைய, பொத்துவில் பிரதேச சபையால்,  விழிப்புணர்வுச் செயற்றிட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக, பொத்துவில் பிரதேச சபைத் தவிசாளர் எம்.எஸ். அப்துல் வாசித் தெரிவித்தார்.

 “புகைத்தல், போதைப்பொருள் பாவனையற்ற பொத்துவில்” எனும் தொனிப்பொருளில், பொத்துவில் பிரதேச மக்களுக்கு விழிப்புணர்வூட்டும் முகமாக, பொது அறிவித்தல்கள் விடுக்கப்பட்டுள்ளதோடு, துண்டுப் பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டு வருவதாகவும், அவர் தெரிவித்தார்.

பொத்துவில் பிரதேச பாடசாலைகளில் மாணவர்கள் மத்தியிலும், வர்த்தக நிலையங்கள், இளைஞர் அமைப்புகள், சமூக சேவை நிறுவனங்கள் உட்பட புகைத்தல் தொடர்பான விழிப்புணர்வுச் செயற்றிட்டம் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தவிசாளர் தெரிவித்தார்.

இந்த விழிப்புணர்வுச் செயற்றிட்டம், மார்ச் 31ஆம் திகதி வரை முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X