Freelancer / 2023 பெப்ரவரி 06 , மு.ப. 01:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
கனகராசா சரவணன்
அம்பாறை, ஆலையடிவேம்பு பிரதேசத்தில் போதைப்பொருள் வியாபாரிகளால் இடம்பெற்றுவரும் போதைப்பொருள் வியாபாரம், சூதாட்டம், மிரட்டல்கள் போன்ற சட்டவிரோத செயற்பாடுகளை நிறுத்தகோரி, பிரதேச செயலகத்தின் முன்னால் வெள்ளிக்கிழமை (03) கவனயீர்பு ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது..
பிரதேச சமூக அமைப்புகள், மத நிறுவனங்கள் ஆகியவற்றின் பிரதிநிதிகள் ஒன்றினைந்து இந்தக் கவனயீர்பு போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.
இதன் போது, அண்மைக்காலமாக போதைக்பொருள் வியாபாரிகளால் மேற்கொள்ளப்பட்ட பல கொள்ளைச் சம்பவங்கள், நீதிமன்ற ஆவணங்களை அழிக்கும் போக்கில் பதிவேட்டறைக்கு தீ வைத்தமை, பிரதேச செயலாளருக்கும் ஆசிரியர்களுக்கும் விடுக்கப்பட்ட கொலை அச்சுறுத்தல்கள் போன்ற தொடர் சம்பவங்களால் பிரதேசத்தின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளதாகவும்
இவற்றைத் தடுக்க பொலிஸார் ஆக்க பூர்வமான நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் ஆற்பாட்டத்தில் கலந்துகொண்டவர்களால் குற்றஞ்சாட்டப்பட்டது.
சூதாட்ட மையங்கள் இயங்கிவருவது தொடர்பான தகவல்களை பொலிஸாருக்கு மக்கள் வழங்குகின்றன போதும், பொலிஸார் உரிய நடவடிக்கை எடுக்காமல் இருப்பது, மேற்சொன்ன சட்டவிரோத செயற்பாடுகளை இப்பிரதேசத்தில் ஊக்குவிப்பது போன்ற தோற்றப்பாட்டை உருவாக்கியுள்ளது என்றும் தெரிவித்தார்கள்.
இதன்போது ஜனாதிபதி, பொலிஸ் மா அதிபர், சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கான மகஜர், ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி. பபாகரனிடம் கையளிக்கப்பட்டது. R
3 hours ago
25 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
25 Oct 2025